Episode's summary
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam
Episodes
"பெயர் உங்களதாக இருக்கலாம், ஆனா நிலம் எப்போதும் எங்களது தான்!"
Listenedஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01 நவம்பர் – 07 நவம்பர் 2026)
Listenedஆஸ்திரேலியாவின் இந்த வார (01 நவம்பர் – 07 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (01 November – 07 November 2026)
யாருடைய அறியாமை? சொல்லப்படாத தீபாவளியின் கதை
Listenedஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தீபாவளித் திருவிழாக்கள் சிலவற்றில், இராவணனின் பிரம்மாண்டமான உருவ பொம்மை எரிக்கப்படுவதோடு அந்த இரவு நிறைவடைகிறது. பலருக்கு இது தீயவற்றின் மீது நன்மைகள் பெற்ற வெற்றியைக் குறிக்கும் மகிழ்ச்சியான அடையாளமாகும். ஆனால், பல தமிழ் மற்றும் இலங்கை வம்சாவளி ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, இது போற்றத்தக்க ஒரு மன்னன் எரிக்கப்படுவதாகவே அமைகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Whose ignorance? The untold story of Deepavali
இன்றைய செய்திகள்: 06 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (06 November 2026 - Friday)
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 31– நவம்பர் 06, 2026)
Listenedஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 31 – நவம்பர் 06 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 31 – November 06, 2026)
உடல் எடை குறைக்க இனி ஊசி தேவையில்லை? Wegovy மாத்திரைக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி!
Listenedஆஸ்திரேலியாவில் உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெகோவி (Wegovy) மருந்து மாத்திரை வடிவில் கிடைப்பதற்கு Therapeutic Goods Administration (TGA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new era in weight loss – Wegovy in a new form
வீழ்ச்சியில் David Jones - நடந்தது என்ன? ஊழியர்கள், Gift Cards வைத்திருப்போரின் நிலை?
Listened188 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் பிரபல David Jones நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சுமார் 6,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast David Jones in Crisis: Customers rush to spend gift cards as David Jones goes into administration
ஆஸ்திரேலியாவுடன் போர் தொடுத்த மிகச்சிறிய நாடு
Listenedஆஸ்திரேலியா ஒரு தீவு, ஒரு நாடு, ஒரு கண்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் வாழ்ந்த நாடுகளைக் கணக்கில் எடுக்காமல், இந்தக் கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன என்று கேட்டால், "அது தானே நீங்களே சொல்லிவிட்டிர்களே, ஆஸ்திரேலியா தான் இந்தக் கண்டத்திலுள்ள நாடு," என்று கேட்பீர்கள் இல்லையா... . பல, micronation என்று சொல்லப்படும் மிகச்சிறிய நாடுகள் உலகில் இருக்கின்றன. அதில் பாதிக்கு மேல், சுமார் இருபத்தி மூன்று மிகச்சிறிய நாடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ளன. அவற்றில் பழமையான நாடான Principality of Hutt River குறித்த ஒரு கதையை அதன் இளவரசர் Graeme அவர்களின் கருத்துகளுடன் 2015ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் தயாரித்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Micro nation that waged war on Australia
உறவுகளின் நினைவுகளோடு… புதிய உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் தீபாவளி
Listenedஇலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உறவினர்களைப் பிரிந்து, ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவங்கள் எப்படிப்பட்டவை? சிட்னியில் North Kellyville-இல் வசிக்கும் தம்பதியனர் ஹரிஹரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜனனி ஹரிஹரன் இருவரும் தங்கள் உறவுகள் தொலைவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தாங்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம், புதிய குடும்பப் பாரம்பரியங்களை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து செல்வி இன்பசேகரனுடன் கலந்துரையாடுகிறார்கள். #sbsaudiopodcast Missing loved ones, embracing new bonds – Deepavali in Australia
235 மில்லியன் டொலர் மோசடி செய்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு !
Listenedமாற்றுத்திறனாளிகளுக்கான NDIS நிதி, Centrelink கொடுப்பனவுகள், மூத்த படைவீரர் உதவி, குழந்தைப் பராமரிப்பு மானியம் - இவை அனைத்தும் வரி செலுத்தும் மக்களின் பணம். அந்தப் பணத்தில் சுமார் 235 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டதாக, அல்லது மோசடி அபாயத்தில் இருந்ததாக, ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை (AFP) நேற்று அறிவித்துள்ளது. அத்துடன், நாடு தழுவிய சோதனைகளைத் தொடர்ந்து ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Police arrest five over $235m fraud
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
Listenedநாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Medical benefits of ginger
இன்றைய செய்திகள்: 05 நவம்பர் 2026 - வியாழக்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (05 November 2026 - Thursday)
'The most lonely feeling': Why the 'Sandwich Generation' is shouldering a growing care burden - பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒருசேரப் பராமரிக்கும் தலைமுறை
ListenedWith the rising cost of living, an ageing population, and support services under strain, more Australians are bearing the brunt of caring responsibilities for both their children and parents. - வளர்ந்து வரும் தங்கள் பிள்ளைகளையும், வயதாகிவரும் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பராமரிக்கும் பொறுப்பைச் சுமக்கும் நடுத்தர வயதினர் Sandwich தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது குறித்து SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Mariel Olenski எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines 'The most lonely feeling': Why the 'Sandwich Generation' is shouldering a growing care burden
விலைவாசி முதல் வட்டிவீத உயர்வு வரை: என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?
Listenedஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருவதுடன், வாழ்க்கைச் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் நிலையில் வீட்டுக் கடன் வைத்திருக்கும் குடும்பங்களும் வணிக நிறுவனங்களும் கூடுதல் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கின்றன.இந்தப் பொருளாதாரச் சூழலுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன? என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்
Parramatta Powerhouse அருங்காட்சியகம் - மேற்கு சிட்னியின் புதிய கலாச்சார அடையாளம்!
Listenedமேற்கு சிட்னியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாரமட்டா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகம் நவம்பர் 7ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new cultural landmark for Western Sydney – Powerhouse Parramatta Museum opens
வீடு வாங்க வசதி இல்லையா? ஒருவேளை அது உங்களுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கலாம்
Listenedநீங்கள் விரும்பும் இடத்தில் வீடு வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததால், வாடகை வீட்டில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். இத்தகைய சூழலில், வேகமெடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பந்தயத்தில் நீங்கள் பின்தங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால், முற்றிலும் மாறியுள்ள தற்போதைய பொருளாதாரச் சூழலில், நம் வாழ்வின் சில கட்டங்களில், வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிப்பதே நிதிப் பாதுகாப்பிற்கான சிறந்த வழியாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகச் சில நிபுணர்கள் கூறுகின்றனர். Camille Bianchi மற்றும் Kerrin Thomas ஆகியோர் எழுதிய விவரணத்தின் அடிப்படையில், இது குறித்து குலசேகரம் சஞ்சயன் தமிழில் முன்வைக்கும் செய்தியின் பின்னணி இது. #sbsaudiopodcast Can't afford to buy a home? You might just be better off
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் சவால்கள் என்ன? எப்படிச் சமாளிப்பது?
Listenedஇன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளன. குழந்தைகள் எதிர்கொள்ளும் மனரீதியான சவால்களைப் பெற்றோர் எவ்வாறு அடையாளம் காணலாம் என்று குழந்தை வளர்ப்பு தொடர்பாக விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். Australian Counselling Association-இன் பதிவு பெற்ற ஆலோசகரான இளவரசியுடன் பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். #sbsaudio podcast What challenges do parents face in raising children, and how can they overcome them?
இன்றைய செய்திகள்: 04 நவம்பர் 2026, புதன்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (04 November 2026 - Wednesday)
மட்டக்களப்பில் கால்நடைகளுக்காக போராடும் பண்ணையாளர்கள்
Listenedமட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைகால்நடைகளின் மேய்ச்சல் தரை நிலங்களில்இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளைவெளியேற்றுமாறும் நீதிமன்ற தீர்ப்பைஅமுல்படுத்த கோரியும் மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்.
ஆஸ்திரேலியாவில் இந்துக் கல்வி மற்றும் கலாசார மையத்திற்காக 'உள்-அகம்'
ListenedShivam School of Danceஇன் புதிய கலைப் படைப்பாக்க முயற்சியே Shivam Dance Creative(SDC) ஆகும். இம்மாதம் 7ஆம் திகதி, SDC தனது முதலாவது கூட்டு நடனப் படைப்பான 'உள்ளகம்' எனும் தனித்துவமான கருப்பொருள் சார்ந்த நடன நிகழ்ச்சியை மேடையேற்றவுள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கலாசேத்ரா நிறுவனத்தின் முன்னாள் மாணவியும், இந்தியாவில் இயங்கி வரும் Dakshina Dance Ensemble நடனக் குழுவின் கலை இயக்குநருமான திவ்யா நாயர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிட்னிக்கு வருகை தந்துள்ளார். Divya Nayar, Shivam School of Danceஇன் இயக்குனர் Saipriya Rahulan, மற்றும் Sumathi Navaratnam ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 'உள்ளகம்' நடன நிகழ்வு: காலம்: சனிக்கிழமை, 7ம் திகதி நவம்பர் 2026. நேரம்: 3:30pm, 6:30pm இடம்: Tom Mann Theatre, Surry Hills. மேலதிக விவரம்: SHIVAM DANCE CREATIVE. Saipriya Rahulan - 0415 066 252. #sbsaudiopodcast 'Ull-Agam' for Hindu Education & Cultural Centre
மெல்பன் கப் 2026 : அரச குடும்பத்தின் முன்னாள் குதிரை வென்றது!
Listenedஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தயப் போட்டியான 2026ஆம் ஆண்டுக்கான மெல்பன் கப், இன்று (நவம்பர் 3) மெல்பனில் உள்ள ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Melbourne Cup 2026: Former royal family horse takes first place
வட்டி விகிதம் மீண்டும் உயர்ந்தது !
Listenedஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) அதிகாரப்பூர்வ வட்டி விகிதத்தை நான்கு புள்ளி எட்டு ஐந்து சதவீதமாக உயர்த்தி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interest rates hit an 18-year high with the RBA's fifth rise of 2026
எந்த நாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் இனி ஓட்டுநர் தேர்வு கட்டாயமில்லை
Listenedவெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இந்த மாதம் முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Drivers from which countries can exchange their licence without a test in Australia?
இன்றைய செய்திகள்: 03 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (03 November 2026 - Tuesday)
ஆஸ்திரேலிய அரசின் முன்னுரிமை மொழிகள் பட்டியலில் தமிழ் மொழி ஏன் இல்லை?
Listenedஎந்த ஆசிய மொழிகளுக்கு ஆஸ்திரேலியா முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, நான்கு மொழிகளை மட்டுமே "முன்னுரிமை மொழிகள்" என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Why was Tamil left off Australia's priority language list?
இன்றைய செய்திகள்: 02 நவம்பர் 2026 - திங்கட்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (02 November 2026 - Monday)
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
Listenedதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி தலைநகர் டெல்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் - பங்கேற்ற தமிழக தலைவர்கள்; கைதிகள் தப்பியோட்டம் - சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை; இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 days
திறந்தது Western Sydney Airport! பயணிக்க விரும்புவோர் அறிய வேண்டியது என்ன?
Listenedசிட்னியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான Western Sydney International Airport கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பயணிகள் சேவையைத் தொடங்கியது. பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புதிய விமான நிலையத்தால் விமானக் கட்டணங்கள் குறையுமா? மேற்கு சிட்னி மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கும் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? உள்ளிட்ட பல தகவல்களை SBS Newsஇன் Caroline Riches தயாரித்த விவரணத்தின் உதவியுடன் தொகுத்து வழங்குகிறார், பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இரா. சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: றைசெல். #sbsaudiopodcast Western Sydney Airport opens: What does it mean for travellers?
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (25 – 31 அக்டோபர் 2026)
Listenedஆஸ்திரேலியாவின் இந்த வார (25 – 31 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். #sbsaudiopodcast Top news from Australia this week (25 – 31 October 2026)
Does rising racism towards Indian Australians point to deeper issues? - ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி - பின்னணி என்ன?
ListenedMany Australians of Indian origin say they’re being singled out and blamed for concerns around housing, jobs and immigration — from online comments telling them to “go back” to reports of physical abuse. - ஆஸ்திரேலியாவின் குடிவரவு விவாதங்களில் இந்தியப் பின்னணியைக் கொண்டவர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து SBS Examines- இற்காக SBS Punjabi ஒலிபரப்பின் Shyna Kalr ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Does rising racism towards Indian Australians point to deeper issues?
Bondi தாக்குதல்: இந்திய பின்னணி கொண்ட ஒருவர் போலி இழப்பீடு கோரியதாக குற்றச்சாட்டு
ListenedBondi பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்ததாகப் பொய்யான இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைத்து இழப்பீடு பெற முயன்றதாகக் இந்திய பின்னணி கொண்ட ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Bondi attack: Indian-Australian accused of making a false compensation claim
சிட்னியில் புதிய மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!
ListenedBankstown முதல் Sydenham வரையிலான புதிய தென்மேற்கு மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New Metro Train Service opens to the public in NSW!
Advance Care Planning, Residential Aged Care/ Home Care – முதியோருக்கான முன்திட்டமிடல்
Listenedவயது முதிர்வும் நோயும் எப்போது வரும் என்பதை எவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நமக்குத் தேவையான பராமரிப்பை இன்றே திட்டமிடுவதன் மூலம், நம்மையும் நம் குடும்பத்தினரையும் பல சிரமங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த முக்கியமான விழிப்புணர்வுத் தலைப்பில், Blacktown மற்றும் Mount Druitt மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் துணை இயக்குநரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளருமான டாக்டர் பி. ஜெயரூபன் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Don’t Wait for a Crisis: Planning Ahead for Our Elders
இன்றைய செய்திகள்: 30 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (30 October 2026 - Friday)
Deepfake அதிர்ச்சி: உங்கள் முகம், உங்கள் அனுமதியின்றி! என்ன செய்யலாம்?
Listenedசெயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட இளைஞர் ஒருவருக்கு Adelaide நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. டீப்ஃபேக்(deepfake) என்றால் என்ன, அதன் ஆபத்துகள் என்ன, இத்தகைய இணைய அச்சுறுத்தல்களிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast The Dark Side of AI: The Deepfake Danger
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 24 – 30, 2026)
Listenedஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 24 – 30) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 24 – 30, 2026)
Blue Mountains: ஆஸ்திரேலியாவில் இயற்கை வடித்த உலகப் பாரம்பரிய அதிசயம்
Listenedஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த இயற்கை அதிசயங்களில் ஒன்றான ப்ளூ மவுன்டன்ஸ், கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவானது. நீல நிறமாகத் தோன்றும் மலைத்தொடர்கள் உள்ளிட்ட தனித்துவமான இயற்கை அழகுடன் மிளிரும் இந்தப் பகுதி, UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ப்ளூ மவுன்டன்ஸ் குறித்த சிறப்புத் தகவல்களைத் தொகுத்து, “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கீதா மதிவாணன். தயாரிப்பு: றைசெல். #sbsaudiopodcast Blue Mountains: A world heritage treasure in the heart of Australia
நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா?
Listenedநீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா? என்று சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் வழங்கிய பதில்களை தொகுத்து தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு. #sbsaudiopodcast Have you ever wished you were born a man?
Centrelink: மீண்டும் தொடங்கப்பட்ட அபராதங்கள் உங்களை எப்படிப் பாதிக்கும்?
Listenedகிட்டத்தட்ட ஆயிரம் வேலைதேடுவோருக்கு நடந்தது சட்டத்துக்கு முரணானது என்கிறார், அரசுத் துறைகளைக் கண்காணிக்கும் Commonwealth Ombudsman. இப்போது, ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோரை இழப்பீடு கோர விண்ணப்பிக்குமாறு ஃபெடரல் அரசு அழைத்திருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Centrelink: Mutual obligation requirements and compliance penalties restarted
இன்றைய செய்திகள்: 29 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (29 October 2026 - Thursday)
ஆஸ்திரேலியாவில் எங்கள் தீபாவளி: ஒரு பிரிஸ்பேன் குடும்பத்தின் அனுபவம்
Listenedஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி வித்தியாசமானது? இந்தக் கேள்வியுடன், அக்டோபர் 5ஆம் தேதி பிரிஸ்பேனில் Eat Street எனுமிடத்தில் நடைபெற்ற தீபாவளி விழாவில் சிவகுமார், அனிதா, டிலன், அமித் ஆகிய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தோம். SBS கலந்துகொண்ட இந்த விழாவில், அவர்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம் குறித்து உரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு - றைசெல். #sbsaudiopodcast
மனம் விட்டுப் பேச ஓர் இடம்: சிட்னியில் Tamil Safe Space
Listenedசிட்னியின் Toongabbie பகுதியில் இயங்கும் Tamil Safe Space எனும் முன்னெடுப்பு, உளவியல் அதிர்ச்சி அல்லது மனநலச் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு சமூக முயற்சி. இந்தச் சேவை வழங்கும் உதவிகள் என்ன? எவ்வாறு உதவி பெறலாம்? என்று விளக்குகிறார், Tamil Safe Space ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாந்தி சேனாதி அவர்கள். அக்டோபர் மாத மனநல மாதத்தையொட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படும் “உங்கள் மன நலத்திற்காக நடைபோடுவோம்” எனும் நிகழ்வு குறித்தும் அவர் பேசுகிறார். சிட்னியில் உள்ள SBS ஒலிப்பதிவுக் கூடத்தில் சாந்தியுடன் உரையாடுகிறார் றைசெல். #sbssaudiopodcast Tamil Safe Space: Supporting mental wellbeing in Sydney’s Tamil community
பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ள செம்மணி அறிக்கை
Listenedயாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தற்போது வெளிவந்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலுறு மலையை பூர்வீக மக்களிடம் ஆஸ்திரேலிய அரசு மீள் கையளித்தது 1985ம் ஆண்டு, அக்டோபர் 26ம் நாள்
Listenedபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு உலுறு மலையை, அதன் உரிமையாளர்களான பூர்வீக மக்களிடம் மீள் கையளித்தது குறித்து.
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
ListenedAustralian Unity Wellbeing Index - நல்வாழ்வுக் குறியீடு என்ற பெயரில், மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கை குறித்தும், இந்த நாட்டில் வாழ்வது குறித்தும் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பதை, Deakin பல்கலைக்கழகமும் Australian Unity நிறுவனமும் இணைந்து, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அளந்து வருகிறார்கள். அவர்கள் அந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 28 அக்டோபர் 2026, புதன்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவில் உணவுக்காகச் சிரமப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
Listenedஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 27 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Today's highlights (27 October 2026 - Tuesday)
How people shape change, and why your voice matters - மக்கள் எவ்வாறு மாற்றத்தை உருவாக்குகிறார்கள், உங்கள் குரல் ஏன் முக்கியமானது
ListenedCan a small group change a local council decision? Through Julie’s community campaign, Padma’s reflections and practical examples including voting, petitions and contacting representatives, this episode explores how everyday actions can make people’s voices heard. - ஒரு சிறிய குழுவால் உள்ளூராட்சி மன்றத்தின் முடிவை மாற்ற முடியுமா? ஜூலியின் சமூகப் பிரச்சாரம்; வாக்குப்பதிவு, மனுக்கள் சமர்ப்பித்தல், மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளுதல் போன்ற நடைமுறை உதாரணங்கள் வாயிலாக, அன்றாடச் செயல்பாடுகள் மூலம் மக்களின் குரலை எப்படிச் சென்றடையச் செய்யலாம் என்பதை இந்த நிகழ்ச்சி ஆராய்கிறது. How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு…
Australia's changing languages shape new SBS review - ஆஸ்திரேலியாவில் பிறமொழி பேசுவோர் அதிகரிப்பு: SBS சேவை மீளாய்வு
ListenedMany bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து Hannah Kwon ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period taking place, which runs from the 5th of October to the 13th of November. - The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period…