Maalaimalar Tamil

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS
00:00
00:00

Episode's summary

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஒட்டி, இன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும், அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Episodes

6209-

திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது!

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஒட்டி, இன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும், அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 Nov 2026
6208-

மாலை செய்திகள் (24-11-2026)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றம்

24 Nov 2026
6207-

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசு முடிவு என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், நாளை (நவம்பர் 24) திருவிழா நடைபெறவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமலில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் ஒருமுறை மலை உச்சிக் கல் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20 அன்று அனுமதி வழங்கியது. குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்ட இந்த அனுமதி, எதிர்கால மத அல்லது உரிமைக் கோரிக்கைகளுக்கு முன்னுதாரணமாக அமையாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

23 Nov 2026
6206-

மாலை செய்திகள் (23-11-2026)

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் முக்கிய ஆலோசனை...

23 Nov 2026
6205-

காவிரி படுகையில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

காவிரி படுகையில் சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுயுறுத்தியும், அதனை கேட்காமல் முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டதால், தற்போது டெல்டாவில் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

22 Nov 2026